Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Tuesday, December 3, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2024
திருக்குறள் மற்றும் இன்றைய செய்திகள்

திருக்குறள் மற்றும் இன்றைய செய்திகள்

திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்: 846

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.

பொருள்: தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

பழமொழி:

Call a spade a spade

உள்ளதை உள்ளவாறு சொல்.

இரண்டொழுக்க பண்புகள்:

  • புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்.
  • பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

பொன்மொழி:

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது. - ஆப்ரகாம் லிங்கன்

பொது அறிவு:

  1. ஒருங்கிணைந்த கடல் உயிர்வாழ் பயிற்சி மையமானது எங்கு தொடங்கியுள்ளது?
    விடை: கோவா.
  2. 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வணிகப் பெண்மணி விருதினை பெற்றவர் யார்?
    விடை: பினா மோடி.

English Words & Meanings:

  • Lucky: அதிர்ஷடமான
  • Needy: தேவையுள்ள

வேளாண்மையும் வாழ்வும்:

திறனுள்ள கரிம பூச்சிக் கொல்லிகளில், வேம்பு, ஸ்பினோசாட், சோப்புகள், பூண்டு, நாரத்தை எண்ணெய், காப்சைசின் (விரட்டுப் பொருள்), பேசிலஸ் பொபில்லே, ப்யூவாரியா பாசியனா மற்றும் போரிக் அமிலம் ஆகியவை அடங்கும்.

மேலும், "பிரேக்குகள் இருப்பதால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத்தான் நம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள். தடைகள் வரும் பொழுது நமது வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து வருத்தப்படுகிறோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் "பிரேக்குகள்" உங்கள் வேகத்தை குறைப்பதற்காக அல்ல. வேகமாக செல்வதற்காக தான். "பிரேக்குகள்" கொண்டு வேகமாகச் சென்றால், நாம் விரும்பிய இலக்கை விரைவில் அடையலாம்."

இன்றைய செய்திகள் (03.12.2024):

  • ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
  • மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக டிசம்பர் 9-ல் பேரவையில் தனித் தீர்மானம்: சபாநாயகர் அப்பாவு தகவல்.
  • நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்.
  • சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை.
  • சர்வதேச பேட்மிண்டன் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
  • செஸ் தரவரிசை புள்ளி: சாதனை படைத்த இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி.

Today's Headlines (03.12.2024):

  • The Electricity Board has announced that the deadline for paying electricity bills without penalty in the 6 districts affected by Cyclone Fanjal - Villupuram, Cuddalore, Kallakurichi, Dharmapuri, Krishnagiri, and Tiruvannamalai - has been extended till December 10.
  • Separate resolution in the Assembly on December 9 against the Madurai tungsten mine: Speaker Appavu informed.
  • The Union Minister of Ports, Shipping and Water Transport informed that a target has been set to attract 10 lakh passengers by 2029 through the water tourism project.
  • US President Donald Trump has warned that a 100 percent tax will be imposed on BRICS countries if they plan to introduce a new currency to replace the dollar in international trade.
  • International badminton tournament: Indian player P.V. Sindhu won the championship title.
  • Chess ranking point: Indian player Arjun Erigaisi created a record.
Subscribe to Our Channels

Subscribe to Our Channels