தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, பிப்ரவரி 2025 NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) FEB 2025
தேர்வு தேதி
தேர்வு தேதி: 22 பிப்ரவரி 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி
கடைசி தேதி: 31 டிசம்பர் 2024 முதல் 24 ஜனவரி 2025 வரை
தேர்வு முறைகள்
- மதநிலை திறன் பரிசோதனை (MAT)
- கல்வி திறன் பரிசோதனை (SAT)
பணமளிப்பு விவரம்
விண்ணப்ப கட்டணம்: ₹50 (பொது மற்றும் பிறபல்வகை பிரிவுக்கு)
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -600 006 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, பிப்ரவரி 2025 NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) FEB 2025 அறிவிப்பு
தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் வருடத்துக்கு ₹12,000 பெறுவார்கள். குடும்ப வருமானம் ₹3,50,000 உட்பட இருக்க வேண்டும். 2024-2025 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு 22.02.2025 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 31.12.2024 முதல் 24.01.2025 -க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 24.01.2025-க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.