Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Thursday, December 5, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2024

Welcome to Akwa Academy, where knowledge meets innovation! Our mission is to empower learners with skills, creativity, and confidence to thrive in today's world. Discover engaging courses, expert guidance, and a vibrant community dedicated to your growth. Join us in unlocking your potential and achieving your dreams with Akwa Academy!
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2024

திருக்குறள்

பால்: பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்: 848

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.

பொருள்: தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

பழமொழி

English: Well began is half done
தமிழ்: நல்ல தொடக்கம் பாதி வெற்றி

இரண்டொழுக்க பண்புகள்

  • புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்.
  • பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

பொன்மொழி

தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார் -- பிடல் காஸ்ட்ரோ

நீதிக்கதை

கடல்

கடல் ஒருவருக்கு கொடையளிக்கும் போது, மற்றவருக்கு சவாலாகிறது. மனிதர்கள் தங்கள் அனுபவங்கள் மூலம் உலகத்தை நன்கு அல்லது தீயதாக மதிக்கிறார்கள். நட்பு நீடிக்க, பிறர் தவறுகளை மனதில் வைத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இது வாழ்வை சிறப்பாக்கும்.

பொது அறிவு

  1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை? விடை: 27
  2. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது? விடை: கால்சியம் பாஸ்பேட்

English Words & Meanings

  • Proud: பெருமை
  • Sad: சோகம்

வேளாண்மையும் வாழ்வும்

நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும்.

இன்றைய செய்திகள் (தமிழ்)

  • இன்று மாலை 4.08 மணி அளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட் நாளை மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  • ஸ்காட்லாந்து நாட்டில் 132 வருடத்திற்கு முந்தைய பாட்டில், அதனுள் உள்ள கடிதத்துடன் கண்டெடுக்கப்பட்டது.
  • மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • வெம்பக்கோட்டை அகழாய்வில் மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுப்பு.
  • இந்தியா-பூடான் இடையே நட்புறவை வலுப்படுத்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இந்தியா வருகை.

Today's News (English)

  • ISRO's PSLV-C59 rocket launch scheduled for 4.08 pm today has been postponed to tomorrow evening.
  • A 132-year-old bottle containing a letter written with bird feathers and ink has been found in a Scottish lighthouse.
  • Heavy rains and floods in Malaysia and Thailand have claimed 30 lives.
  • Beads and conch bracelets were discovered during excavations in Vembakottai.
  • Bhutanese King Jigme Khesar Namgyal Wangchuck is on a two-day visit to India to strengthen bilateral relations.
Covai women ICT_போதிமரம்
Subscribe to Our Channels

Subscribe to Our Channels

Prepare well for each subject and give your best performance in the exams. All the best!