Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Tuesday, March 4, 2025

டெஸ்லா’ கார் தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கு வருகிறது?

டெஸ்லா’ கார் தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கு வருகிறது?
டெஸ்லா கார் தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கு வருமா?

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ கார் தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கு வருமா?

சென்னை, மார்ச் 4: உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான 'டெஸ்லா' நிறுவனத்தை, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் நடத்தி வருகிறார். இந்தியாவில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், டெஸ்லா மும்பையில் தனது முதல் ஷோரூமை திறக்க உள்ளது.

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தில் 4,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமின் மாத வாடகை சுமார் ரூ. 35 லட்சம் என கூறப்படுகிறது. அதேபோல், டெல்லியில் மூன்றாவது ஷோரூமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெஸ்லா கார்களின் தொடக்க விலை ரூ. 21 லட்சம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் டெஸ்லா விற்பனைக்கு வரவுள்ளது.

முக்கியமாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா தொழிற்சாலை அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதால், தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு பிறகு, இந்தியாவிலும் டெஸ்லா தொழிற்சாலை தொடங்கப்படலாம். தமிழ்நாடு அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்கப்பட்டால், அது மோட்டார் வாகன தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.