Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Thursday, May 22, 2025

ஆசிரியர்களின் பணியில் ஆட்சியர்களின் தலையீடு அதிகம்

ஆசிரியர்களின் பணியில் ஆட்சியர்களின் தலையீடு அதிகம்
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகக் கூட்டம்

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் – பொதுக்குழு கூட்டம்

ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்தது.

விருதுநகர் – தமிழக முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நிலை ஆசிரியர்களுக்கான மே மாத விடுமுறை உறுதி, தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பும் கலந்தாய்வு உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கிய தீர்மானங்கள்

  • தனி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய வேண்டும்
  • பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
  • தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்
  • முதுகலை ஆசிரியர் பணியிட மாற்றம் உடனடியாக நடத்தப்பட வேண்டும்
  • பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் விரிவாக்கம்
  • தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு கட்டணம் அரசு செலுத்த வேண்டும்
  • மே மாத விடுப்பு அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்

“பள்ளிகள் ஜூன் 2ல் திறக்கப்படும்போது, தலைமை ஆசிரியர் இல்லாமல் இருக்கக் கூடாது” என்றும் பிரபாகரன் வலியுறுத்தினார்.

முடிவில், மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு முதுகலை ஆசிரியர்களின் பணிகளை பாதிப்பதாக கூறிய தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இதை வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்தது.

Related Posts: