Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Monday, November 25, 2024

Phone Pe / GPay பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி - கவனமாக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை

Phone Pe / GPay பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி - கவனமாக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை.. Phone Pe / GPay பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி - கவனமாக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை
போன் பே மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை

போன் பே மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை

போன் பே உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவகை பண மோசடி நடந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் போன் பே உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்தப்படுவதன் மூலம் மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறுவதாக சமீபத்தில் புகார்கள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் போன் பே வழியாக அவர்களுக்கு தெரியாமல் அல்லது அனுமதியின்றி அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து எதிர்பாராத முறையில் பணத்தை மோசடியாக திருடுவதாக புகார் அளித்துள்ளனர்.

மோசடிகள் எப்படி நடைபெறுகின்றன?

விசாரணையின் போது மோசடிகள் செய்யப்படும் தொகைகள் அமேசான் பேக்குச் செலுத்தப்படும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசடிக்காரர்கள் “பிரதமர் கிஷான் யோஜனா” எனும் செயலியை பயன்படுத்தி யுபிஐ தரவுகளை திருடுகின்றனர்.

மோசடிகளைத் தடுக்க வழங்கப்படும் அறிவுரைகள்:

  • உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும்.
  • தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வதையும் தேவையில்லாத செய்திகளைப் பதிலளிப்பதையும் தவிர்க்கவும்.
  • யுபிஐ தரவுகளை அல்லது OTP-ஐ பகிர்வதை தவிர்க்கவும்.
  • அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
  • மோசடிக்கு ஆளானால் 1930 உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் செய்யவும்.

அனைவரும் விழிப்புடன் இருந்து, மோசடிகளிலிருந்து தங்களை பாதுகாக்கவும்.