இன்று (அக். 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தொடர் கனமழையால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அறிவிப்பு:
கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
FLASH: மேலும் 3 மாவட்டங்களில் விடுமுறை
தொடர் மழை காரணமாக மேலும் 3 மாவட்டங்களுக்கு இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
