*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு — பகுதிகள் மற்றும் கருத்துக்கள்*
"power to relax என்பது வினாத்தாளின் வடிவமைப்பு மற்றும் தரம் உட்பட எல்லாவற்றிலும் relax என்பதாக புரிந்து கொண்டோமா நாம்...!!??"
💥💥💥💥💥💥💥💥💥💥
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் TET
உச்சநீதிமன்றம் ஆசிரியர்கள் பணியில் தொடர்ந்து பதவி உயர்வு பெற TET (Teacher Eligibility Test) கட்டாயம் என்ற தீர்ப்பினை பதிவு செய்துள்ளது. RTE (Right to Education) அதற்கான காரணங்களை பிரிவு 23 இல் விரிவாக கூறுகிறது — தகுதியான மற்றும் தரமான ஆசிரியர்கள் தேவை என்று. NCTEவின் (National Council for Teacher Education) கூறிய விளக்கமும் அதே கோட்பாட்டை ஆதரிக்கிறது.
NCTE கூறும் விவரங்கள்
👉 TET வினாத்தாள் — 150 கேள்விகள், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். Negative marking இல்லை.
👉 பிரிவுகள்: மாநில மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், வரலாறு (அல்லது அறிவியல்), கல்வி உளவியல் — ஒவ்வொரு பிரிவுக்கும் 30 கேள்விகள்.
👉 கேள்வி தரம்: Paper 1 – linkage up to secondary; Paper 2 – linkage up to higher secondary.
பிரச்சினை விளக்கம்
மேலே கூறிய 150 மதிப்பெண்களின் தரமும் வடிவமைப்பும் இல்லாமல், வினாத்தாளை மிக எளிமையாக செய்து "சிறப்பு ஆசிரியர் தகுதி" என்ற பெயரில் வழங்க முடியுமா? என்பது எதிர்மறையானதல்ல. இது அறிவாகவும், நியாயமாகவும் சிந்திக்கப்பட வேண்டியது.
அரசாணை மற்றும் முன்னோடியான நடைமுறை
அரசாணை 231 (தேதி: 13.10.2025) படி சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க செய்வதற்காக நடைமுறையாக வழங்கப்பட்டது. கடந்த காலத்தில் இது நடைபெற்றதும் வினாத்தாளின் வடிவமைப்பு மற்றும் தரம் குறையவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முக்கிய முறைப்பாடுகள்
100 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டால், அல்லது எளிமையாக கேள்விகள் அமைத்தால் அது நமக்கே தீங்கு.
பணியில் தொடரும் ஆசிரியர்கள் (especially pre-2010 recruits) TET-இன் கட்டற்ற நிரந்தரத்தன்மையை தேவைப்படுத்துவர் என அறிய வேண்டும்.
பணியின் தொடர்ச்சியும் பதவி உயர்வும் விழிப்புணர்வு வேண்டிய முக்கிய பிரச்சனைகள்.
எனவே என்ன செய்யவேண்டும்?
சிக்கலான சூழலைப் புரிந்து கொண்டு, "பணியில் தொடர" வேண்டுமானால் TET வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டை நிலைநாட்டுவது சரியான வழி என்றும், முழுமையான நிர்வாகம் மற்றும் சட்டபூர்வமான மதிப்பீடு மூலம் தீர்வு தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு --power to relax என்பது வினாத்தாளின் வடிவமைப்பு மற்றும் தரம் உட்பட எல்லாவற்றிலும் relax என்பதாக புரிந்து கொண்டோமா நாம்...!!??
💥💥💥💥💥💥💥💥💥💥
*உச்சநீதிமன்றம் ஆசிரியர்கள் பணிகள் தொடர.. பதவி உயர்வு பெற TET கட்டாயம் என்று தீர்ப்பளித்தது.RTE சட்டம் நாடு முழுமைக்கும் தகுதியான, தரமான ஆசிரியர்கள் வேண்டும் என்பதை பிரிவு 23 இல் விரிவாக சொல்கிறது. அதற்கென TET தேர்வு வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைத்து.. TET தேர்விற்கான Frame work.. NCTE சொல்லியபடி இருக்க வேண்டும் என்றது.*
*சரி என்ன சொல்கிறது NCTE??*
👉
_TET வினாத்தாள் 150 கேள்விகளைக் கொண்டது... ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு மதிப்பெண்.. Negative mark இல்லை. அந்தந்த மாநிலங்களின் மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், வரலாறு ( அறிவியல்),கல்வி உளவியல் என ஐந்து பிரிவாக .. ஒவ்வொரு பிரிவுக்கும் 30 கேள்விகள்._
👉
_கேள்விகளின் தரம் paper 1 தேர்விற்கு.. linkage upto secondary stage_
👉
_paper 2 தேர்விற்கு linkage upto higher secondary stage.._
*மேற் சொன்ன 150 மதிப்பெண்கள் இல்லாமலோ... அல்லது வினாத்தாளின் தரம் மிகவும் குறைந்தெளிமையாகவோ வினாத்தாளை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு என்கிற பெயரில் கொடுத்து விட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்பது தான் கசப்பான உண்மை.*
*சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அதிகமான வாய்ப்பினை தருவதற்காக தான் என்பதை அரசாணை 231, தேதி:13.10.2025 ஐ நன்றாக படித்தால் உள்வாங்கலாம். இது போன்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏற்கனவே நடந்துள்ளது.pwd candidates காக அந்த தேர்வு நடந்த போது வினாத்தாளின் வடிவமைப்பு மற்றும் தரம் 1% கூட குறையவில்லை என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.*
*அதை விடுத்து 100 மதிப்பெண்களுக்கு தான் கேள்வி கேட்கப்படும்.. அரசின் நலத்திட்டங்கள் உட்பட எளிமையாக கேள்விகள் இருக்கும்.. அனுபவத்திற்கு வெயிட்டேஜ் என்று பல்வேறு பதிவுகளை போட்டு நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ளலாமே தவிர TRB ஆல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு Notification வரும்போது நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வோம்.*
*அதனால் இந்த பிரச்சனையை பொருத்தவரை உண்மையான தீர்வு தேர்வு என்று நினைத்தால் அது தான் இல்லை.. 23.8.2010 முன்னர் நியமனம் பெற்ற ஒரே ஒரு ஆசிரியர் கூட பணியில் இருந்து வெளியேறக்கூடாது என்றால்..REVIEW மூலம் பணியில் தொடர TET தேவையில்லை என்று வாங்குவதுதான். பதவி உயர்வு அடுத்த கட்ட பிரச்சனை. பணி என்பது நம் வாழ்வாதார பிரச்சனை.*
*எப்படியும் வினாத்தாள் மிகவும் எளிமையாக கேட்க முடியாது. ஆறு தேர்வுகளில் குறைந்தபட்சம் 10000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டால்போதும் நம் நிலை என்ன? கற்றல் கற்பித்தல் பணிகளையும் செய்து கொண்டு.. நம் வாழ்வியல் கடமைகளையும், சுமைகளையும் எதிர்கொண்டு.. எப்படி முழுமையாக தேர்வுக்கு தயாராவது?? அதிலும் பெண் ஆசிரியர்கள்??!!*
*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நம்மை சிக்க வைக்கும் வலை என்பதை புரிந்து கொண்டு.. பணியில் தொடர TET தேவையில்லை என்று வாங்குவது தான் சரியான வழி..*