பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு
தொடங்கப்பட்ட ஆண்டு
தமிழக அரசு 2011-2012ஆம் கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தியதால், மார்ச் 2012 முதல் அறிவியல் செய்முறை தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
மதிப்பெண் விபரம்
பகுதி | மதிப்பெண்கள் |
---|---|
கருத்தியல் தேர்வு | 75 |
செய்முறை தேர்வு | 25 |
தேர்வு நேரம்
இயற்பியல் மற்றும் வேதியியல்: 1 மணி நேரம்
தாவரவியல் மற்றும் விலங்கியல்: 1 மணி நேரம்
மொத்தம் 2 மணி நேரம்
காலை: 9.00 AM - 11.00 AM
மாலை: 2.00 PM - 4.00 PM
செய்முறை தேர்வு வினாக்கள்
இயல் அறிவியல்
- இயற்பியல் - ஒரு வினா - 5 மதிப்பெண்
- வேதியியல் - ஒரு வினா - 5 மதிப்பெண்
- மொத்தம் - 10 மதிப்பெண்
உயிர் அறிவியல்
- தாவரவியல் - ஒரு வினா - 5 மதிப்பெண்
- விலங்கியல் - ஒரு வினா - 5 மதிப்பெண்
- மொத்தம் - 10 மதிப்பெண்
உள்நிலை மதிப்பெண்கள் (Internal Marks)
பகுதி | மதிப்பெண்கள் |
---|---|
ஆய்வுக்கூட வருகை | 1 |
மாணவர் ஆய்வக செயல்திறன் | 1 |
மாணவர் ஆய்வக ஈடுபாடு | 1 |
ஆய்வக பதிவுக் குறிப்பேடு | 2 |
மொத்தம் | 5 |
குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்
கருத்தியலில் (75 மதிப்பெண்களில்) குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் தேவை.
செய்முறை தேர்வில் (25 மதிப்பெண்களில்) குறைந்தபட்சம் 15 மதிப்பெண்கள் தேவை.
செய்முறை தேர்வு விலக்கு
மாற்றுத்திறனாளி மாணவர்கள் விரும்பினால், செய்முறை தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரலாம். இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கடிதம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரிடம் கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Leave a Comment