We kindly request you to send your district's question papers to us via email at akwaacademy@gmail.com. Your contribution will help us build a comprehensive resource for everyone's benefit. Thank you for your cooperation and support!
தங்கள் மாவட்டத்தின் கேள்விப் பதிவுகளை akwaacademy@gmail.com மின்னஞ்சல் மூலமாக எங்களுக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பங்களிப்பு அனைவருக்கும் பயன்படக்கூடிய வளத்தை உருவாக்க உதவும். உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!
வடகிழக்கு பருவமழை விலகியது
வானிலை மையம் அறிவிப்பு
சென்னை, ஜன.28: வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து நேற்றுடன் விலகுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. இந்த கால கட்டத்தில் ஒன்றிரண்டு புயல்கள் தவிர பெரும்பாலும், காற்று சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி, கடல் வெப்பத்தின் காரணமாக கடலில் வாரக்கணக்கில் நிலை கொண்டு பெரும் மழைப்பொழிவை கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் 3 வாரம் வரை மழை பெய் பெய்து கொண்டு இருக்கிறது. தற்போது வட மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைந்து வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் தென்னிந்தியப் பகுதிகளில் இன்னும் மழை பெய்வது நீடிக்கிறது.
இருப்பினும் வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் வரை வறண்ட வானிலை நீடித்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இன்னும் இரண்டு நாட்களில் தென்னிந்தியப் பகுதிகளில் இருந்து விலகும் என்று என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இருப்பினும் நேற்றுடன் வடகிழக்கு பருவமழை விலகுவதாக இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
மேலும், அடுத்த 27 மற்றும் 28ம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவும், 29ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 30ம் தேதி தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 31ம் தேதி கோவை மாவட்டத்தின் ம லைப் பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், காலையில் பொதுவாக லேசான பனி மூட் - டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 90 டிகிரி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.