இணையவழி சான்றிதழ் படிப்புகள்
பள்ளிகளுக்கு ஐஐடி அழைப்பு
Akwa Academy
சென்னை, ஜூலை 2: இணையத்தில் மாணவர்களுக்கு சேர்க்கை பெற பள்ளிகளுக்கு சென்னை ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை ஐஐடி பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் ஏஐ, பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய இரு படிப்புகளை இணையவழியில் நடத்தி வருகிறது.
அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சேரும் வகையில், ஏஐ, டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக் சிஸ்டம், ஆர்க்கிடெக் சர் டிசைன், என்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் உள்ளிட்ட 10 இணையவழி சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ் கல்வியாண்டில் ஆகஸ்ட், அக்டோபர், ஜனவரி என 3 தொகுதிகளாக இந்தப் படிப்புகள் நடத்தப்படும்.
ஆகஸ்ட் தொகுதிக்கான படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் code.iitm.ac.in/schoolconnect என்ற இணையதளத்தில் ஜூலை 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
ஐஐடி இயக்குநர் வீ. காமகோடி கூறியதாவது:
"ஏஐ, டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக் சிஸ்டம் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகள் குறித்து மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே அறிந்து கொள்வதால் அவர்களுக்கு அந்தத் துறை மீது பேரார்வம் ஏற்படும்."
"மேலும், அது அவர்களின் எதிர்காலத்தை நல்ல முறையில் செதுக்கும். இந்த இணையவழிக் கல்வி திட்டம் பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் இணைக்கும் பாலமாகச் செயல்படும்."
Leave a Comment