Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Wednesday, July 30, 2025

ஜூலை 2025 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) துணைத்தேர்வு

ஜூலை 2025 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) துணைத்தேர்வு
SSLC & +1 Supplementary Notification

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6

ஜூலை 2025, பதினொன்றாம் வகுப்பு / மேல் நிலை முதலாம் ஆண்டு (+1) துணைத்தேர்வு

தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Certificate) / மதிப்பெண் பட்டியலை (Statement of Mark Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளும் மற்றும் விடைத்தாள் நகல் நகலை விண்ணப்பிக்கும் குறித்து அறிவிப்பு:

I. மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம்:

ஜூலை 2025, பதினொன்றாம் வகுப்பு / மேல் நிலை முதலாம் ஆண்டு (+1) துணைத்தேர்வு முடிவுகள் 31.07.2025 (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணி முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வாளர்கள் “RESULT” → “SSLC / HR SEC FIRST YEAR SUPPLEMENTARY EXAM JULY–2025 PROVISIONAL CERTIFICATE DOWNLOAD” கிளிக் செய்து தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

II. விடைத்தாள் நகலுக்கான விண்ணப்பம்:

தேர்வர்கள் 04.08.2025 (திங்கள்) காலை 11.00 மணி முதல் 05.08.2025 (செவ்வாய்) மாலை 5.00 மணி வரை www.dge.tn.gov.in இணையதளத்தில் “NOTIFICATION” → “SSLC Examination / Higher Secondary Examination” → “SCAN COPY APPLICATION” கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.275/- கட்டணமாகும். அரசு தேர்வுகள் அலுவலகத்தில் பணம் செலுத்த தேவை இல்லை.

விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்கள் மட்டும் பின் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

மீண்டும் உறுதிப்படுத்திய தேதி தளத்தில் அறிவிக்கப்படும்.

இடம் : சென்னை - 600 006.
நாள் : 29.07.2025

உம் /- இயக்குநர்