Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Wednesday, July 9, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2025
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2025

🛐 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2025

திருக்குறள்:

குறள் 92:
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

விளக்கம்:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

பழமொழி:

A journey of a thousand miles begins with a single step.
ஆயிரம் மலை பயணம் ஒரு அடியில் தான் தொடங்குகிறது.

இரண்டொழுக்க பண்புகள்:

  • வார்த்தையால் பேசுவதை விட.. வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்
  • எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி:

ஒருவரது பேச்சு அவரது நடத்தையை எடுத்துக் காட்டும் ஒரு கோணமாகும். - ஜேம்ஸ் பார்ஸன்.

பொது அறிவு:

  • தமிழ்நாட்டில் மாமல்லபுரம் நகரை உருவாக்கிய மன்னன் யார்? - முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (Narasimhavarma Pallava I)
  • இந்தியாவில் நறுமணப் பொருட்களின் தொட்டில் என்று அழைக்கப்படும் மாநிலம் எது? - கேரளா (Kerala)

English Words:

Riddle – a difficult question which has a clever or amusing answer. (புதிர்)

Grammar Tips:

The radius of both the circles are equal – In this sentence radius should be replaced by radii.

அறிவியல் களஞ்சியம்:

மனித உடலில் 60% நீர் உள்ளது. இது சுமார் 50-60 லிட்டர். 100 கிலோ உடல் எடையுள்ள மனிதனில் 60 லிட்டர் தண்ணீர் உள்ளது.

வரலாறு:

09 ஜூலை 1875 - இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை நிறுவப்பட்டது.

நீதிக்கதை:

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப்படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று எப்போதும் பிறரை ஏமாற்றுவது தான் பொழுது போக்காக இருந்தது. ஒருநாள், கொக்கு ஒருவனை நட்பாக அழைத்து, கஞ்சி தட்டில் கொடுத்து சாப்பிட முடியாமல் பார்த்தது.

அவமானம் அடைந்த கொக்கு, நரியை ஜாடியில் கஞ்சி வைத்து வரவேற்று, நரிக்குப் பாடம் புகட்டியது.
நரியும் தன் தவறை உணர்ந்து திருந்தியது.

பிறரை வஞ்சிக்க கூடாது; அவர்களை உதவிசெய்தல் உயர்வு.

இன்றைய செய்திகள் (09.07.2025):

  • ⭐ தமிழ்நாட்டில் 100 உயர்மட்ட பாலங்களுக்கு ரூ. 505 கோடி ஒதுக்கீடு.
  • ⭐ ஜப்பானிய பொருட்களுக்கு அமெரிக்கா 35% வரி விதிப்பு.
  • ⭐ தமிழ்நாட்டில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப உத்தரவு.
  • ⭐ கடலூர் பள்ளி வாகனத்தில் ரெயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்:

  • IPL பிராண்டு மதிப்பு உயர்வு – CSK-ஐ கடந்த RCB, MI
  • குரோஷியா சர்வதேச செஸ் போட்டி: நார்வே வீரர் கார்ல்சென் சாம்பியன்.

Today's Headlines (English):

  • ✏️ Tamil Nadu government allocates ₹505 crore for high-level bridges in rural roads.
  • ✏️ 2,299 village assistant posts to be filled immediately.
  • ✏️ Train hits private school vehicle in Cuddalore; students killed.
  • ✏️ US to impose up to 35% tax on Japanese goods.

🏀 SPORTS NEWS:

  • 🏀 IPL brand value soars – RCB, MI overtake CSK.
  • 🏀 Croatia International Chess Tournament – Norwegian Carlsen wins championship.

Covai women ICT_போதிமரம்