வழிகாட்டி நெறிமுறை வெளியிடாததால் குழப்பம்
தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப் படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாயினும், இதுவரை பள்ளிகளுக்கு எந்தவித நெறிமுறையும் அனுப்பப்படவில்லை. இதனால் தேர்வு ரத்து குறித்து, மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.
தமிழகத்தில், 'மாணவி' தற்கொலைக்கு பின், மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடிய தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை, அந்தத் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, எந்தவித நெறிமுறையும் பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை. ...
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து குறித்து தெளிவான அறிவிப்பு வராததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே குழப்ப நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு கூறினர்.