டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள்
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரத் தகுதி தேர்வில் (TET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011ம் ஆண்டு அமலுக்கு வந்தது.
அதன் பின் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணியிடம் மேற் கொள்ளப்படுகிறது. இதற்காக பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கல்வித் துறை அமைச்சகம் ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்களின் பள்ளிகளில் பணிபுரியும் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது.
குறிப்பு: இந்த விவரங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் சேகரிக்கப்பட வேண்டும்.
