ஒரே நாளில் மரக்கன்றுகள் நடுதல் — வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு
பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்: காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழல் வாழ்வியல் திறனின் கீழ் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்றுகள் நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழல் பகுதியில் நட வேண்டும். அவ்வாறு நடவை முடித்த பின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் புகைப்படம் எடுத்து தளத்தில் பதிவேற்ற வேண்டும். பள்ளி அளவில் சிறந்த குழந்தைகள் அணிப்படை செயல்பாடுகளுக்கு மாணவர்களை வழிநடத்த ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

