தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள். கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு மாநிலங்களிலும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டுக்கான தகுதி தேர்வு நடந்தது. அதற்கு அடுத்த தேர்வு நடக்கவில்லை. கடந்த மாதம் 2024ம் ஆண்டுக்கான தேர்வுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட்டது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்பணி தொடங்கியது. இந்த அறிவிப்பின்படி செப்டம்பர் 8ம் தேதி இன்று விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஆகும்.
இன்று மாலை 5 மணிக்குள் ஆசிரியர்கள், பட்டதாரிகள் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.