அண்ணா பல்கலை. நடத்தும் TANCET தேர்வு: எந்தெந்த படிப்புகளுக்கு அவசியம்?
அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் 'தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' (TANCET) மற்றும் 'காமன் இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் டெஸ்ட் அண்ட் அட்மிஷன்ஸ்' (CEETA-PG) எனப்படும் நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகள் மூலம் மாணவர்கள் கீழ்க்கண்ட முதுநிலை படிப்புகளில் சேரலாம்:
TANCET-2025
இந்த தேர்வு மூலம் மாணவர்கள் M.B.A., M.C.A. போன்ற படிப்புகளில் சேரலாம்.
- M.B.A. (Master of Business Administration)
- M.C.A. (Master of Computer Applications)
CEETA-PG
இந்த தேர்வு M.E., M.Tech., M.Arch., M.Plan. போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு தேவையானது.
- M.E. / M.Tech. (Master of Engineering / Master of Technology)
- M.Arch. / M.Plan. (Master of Architecture / Master of Planning)
M.B.A. சேர்வதற்கான தகுதி
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
- குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் (OBC/MBC/SC/ST/PwD மாணவர்களுக்கு 45%).
M.C.A. சேர்வதற்கான தகுதி
- B.C.A., B.Sc. (IT), B.Sc. (CS) அல்லது சமமான பட்டப்படிப்பு.
- பிளஸ் டூவில் கணிதம் பாடமாக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் (தளர்வுகளுடன்).
தகவல் மற்றும் தொடர்பு
The Secretary, Tamil Nadu Common Entrance Test (TANCET/CEETA-PG)
Centre for Entrance Examinations, Anna University, Chennai – 600 025.
தொலைபேசி: 044-2235 8289 / 044-2235 8314
மேலும் விவரங்களுக்கு: www.tancet.annauniv.edu