Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Friday, February 7, 2025

TNPSC டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகள் 2025 - பாடத்திட்ட மாற்றம் இல்லை!

TNPSC டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகள் 2025 - பாடத்திட்ட மாற்றம் இல்லை!
டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகள் 2025 - பாடத்திட்ட மாற்றம் இல்லை!

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகள் 2025 - பாடத்திட்ட மாற்றம் இல்லை!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகள் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது.

இதற்கான பாடத்திட்டங்கள், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு, புதிய பாடத்திட்டங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், போட்டித் தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை
டி.என்.பி.எஸ்.சி. மறுத்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி.,

"2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகளின் பாடத்திட்டம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும்.

பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்." என தெரிவித்துள்ளது.

Subscribe to Our Channels

Subscribe to Our Channels

Comment Box

Leave a Comment