Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome
  • Akwa Academy

    Welcome to Akwa Academy.

Monday, June 30, 2025

தேசிய நல்லாசிரியர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய நல்லாசிரியர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய நல்லாசிரியர் விருது

தேசிய நல்லாசிரியர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 29

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.

நிகழாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர்கள் nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணிகளில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லையென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியானவர்களை, முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான மாவட்டத் தேர்வுக் குழு தேர்வு செய்து ஜூலை 16க்குள் மாநிலத் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.

தேர்வுக்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளதை பின்பற்றி செயல்பட வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

திறன் மேம்பாட்டு பயிற்சி: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
திறன் மேம்பாட்டு பயிற்சி அறிவுறுத்தல்

திறன் மேம்பாட்டு பயிற்சி: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 29

திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரக சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள் 5.10.2023 முதல் 29.3.2025 வரை 67 தொகுதிகளாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 3 முதல் செப்டம்பர் 13 வரை மதுரையில் 12 தொகுதிகளாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sunday, June 29, 2025

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு
பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள்

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை, ஜூன் 28:

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Akwa Academy

இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் ந. லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 30-ஆம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது.

அந்த விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in இல் அறிந்துகொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத் துறை இணையதளத்திலிருந்து திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
வாட்டர் பெல் திட்டம் - வழிகாட்டுதல்கள்

அரசுப் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை, ஜூன் 28:

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும் 'வாட்டர் பெல்' திட்டத்தை உடனடியாக அமல்படுத்த தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதுதொடர்பான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு, கேரளத்தைப் போல தமிழகத்திலும் ‘வாட்டர் பெல்' திட்டம் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சனிக்கிழமையன்று அனுப்பிய சுற்றறிக்கை:

Akwa Academy

பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக 'வாட்டர் பெல்' திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாக பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல நன்மைகளைத் தரும்.

இதையடுத்து, மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக 'வாட்டர் பெல் திட்டம்' உடனே பள்ளிகளில் அமல்படுத்தப்பட வேண்டும் என பள்ளித் துறை அறிவுறுத்தியுள்ளது.

வாட்டர் பெல் திட்ட முக்கிய அம்சங்கள்:

  • அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் திட்டம் அமல்.
  • ஒவ்வொரு நாளும் 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்பட வேண்டும்:
    • காலை 11:00 மணி
    • மதியம் 1:00 மணி
    • மாலை 3:00 மணி
  • வாட்டர் பெல், வழக்கமான மணி ஒலியிலிருந்து மாறுபட்ட ஒலியில் இருக்க வேண்டும்.
  • அந்த நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கப்படுவர்.
  • தொடர்புடைய பள்ளியின் இடைவேளை நேரங்களைப் பொருத்து நேர மாற்றம் செய்யலாம்.

செயல்முறை வழிகாட்டுதல்:

  • தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் வகுப்பறைகளில் ஒதுக்கப்படும்.
  • மாணவர்கள் வகுப்புகளுக்கு வெளியே செல்லக்கூடாது.
  • வகுப்பறையிலேயே தண்ணீர் அருந்த வேண்டும்.
  • மாணவர்கள் தாங்கள் வாட்டர் பாட்டில் கட்டாயமாக கொண்டுவர வேண்டும்.
  • இதுபற்றி மாணவர்களுக்கு விளக்கமாக அறிவுறுத்தப்பட வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக செயல்படுத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு உயர்த்தப்பட்ட கல்வி முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகள் வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு உயர்த்தப்பட்ட கல்வி முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகள் வெளியீடு
தமிழக அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கல்வி முன்பணம்

தமிழக அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு
உயர்த்தப்பட்ட கல்வி முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகள் வெளியீடு

சென்னை, ஜூன் 28:

அரசு ஊழியர்களின் வாரிசுகள் உயர்த்தப்பட்ட கல்வி முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவரது உத்தரவு விவரம்:

Akwa Academy

அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுவரும் கல்வி உதவித் தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி,

  • தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சமாகவும்,
  • கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் பயில ரூ.50,000-ஆகவும் கல்வி முன்பணம் அதிகரிக்கப்பட்டது.

இந்தத் தொகையை நிகழ் கல்வியாண்டில் இருந்தே விண்ணப்பித்து பெறலாம்.

ஒரு குழந்தைக்கு மட்டுமே உதவி:

தமிழக அரசின் ஏ, பி, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கல்வி முன்பணம் கிடைக்கும். அரசுப் பணிகளில் நிரந்தரமாக மற்றும் நிரந்தரம் இல்லாமல் பணிபுரியும் ஊழியர்களின் வாரிசுகள் முன்பணம் பெறத் தகுதி படைத்தவர்கள்.

  • ஒரு குடும்பத்தில் கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால் ஒருவர் மட்டுமே முன்பணம் பெற முடியும்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்லூரிகளில் படித்தாலும் ஒரு குழந்தைக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
  • முன்பணம் நிலுவையில் இருக்கும்போது மற்றொரு விண்ணப்பம் செய்ய முடியாது.

தொலைநிலைக் கல்விக்கு கிடையாது:

தொலைநிலைக் கல்வியில் பட்டப்படிப்புகளைப் படித்தால் முன்பணம் பெற முடியாது. ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்போர் தகுதி படைத்தவர்கள்.

இயன்முறை படிப்புகளை பட்டப் படிப்பாகவோ, பட்டயப் படிப்பாகவோ படிப்போருக்கு ரூ.50,000 முன்பணம் கிடைக்கும்.

பணி குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை:

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அல்லது கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள ஊழியர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் பெற முடியாது.

திருப்பிச் செலுத்தும் காலம்:

முன்பணமானது வட்டியில்லாத தொகையாக வழங்கப்படும். முன்பணம் பெறப்பட்ட தேதியில் இருந்து 10 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

ஊழியர்கள் பணியாற்றும் துறையின் தலைமையிலான அதிகாரிகள், தவணை அடிப்படையில் செலுத்தப்படும் தொகையை பதிவு செய்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருது பாட ஆசிரியர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

உருது பாட ஆசிரியர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
உருது பாட ஆசிரியர் நியமன விவகாரம்

உருது பாட ஆசிரியர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை, ஜூன் 28:

சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் 'உருது' பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. Akwa Academy

திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலியாக இருந்த 'உருது' பாட ஆசிரியர் பணியிடத்துக்கு ஹாஜிரா என்பவர், 2022-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவில்லை எனக் கூறி ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து கடந்த 2023-ஆம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

"இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது எனக் கூறி, வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அபராதத் தொகையை, நான்கு வாரத்துக்குள் பள்ளிக்கு வழங்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இத்தொகையை, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து உத்தரவு பிறப்பித்த அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Saturday, June 28, 2025

பள்ளிகளில் ஜாதி மோதலை தடுக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் ஜாதி மோதலை தடுக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு
பள்ளிகளில் ஜாதி மோதலைத் தடுக்க வழிகாட்டுதல்கள்

பள்ளிகளில் ஜாதி மோதலை தடுக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை, ஜூன் 27

மாணவர்களின் ஜாதியை குறிப்பிடக்கூடாது, வருகைப் பதிவேட்டில் ஜாதி தொடர்பான விவரங்கள் இடம் பெறக்கூடாது என பல அம்சங்களை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது:

மாணவர்களிடையே ஜாதி மற்றும் சமூக வேறுபாடு அடிப்படையில் வன்முறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை. நல்லிணக்கம், நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்.

6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக திருக்குறளை மையமாகக் கொண்ட நன்னெறி வகுப்புகள் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் இலக்கியம், வினாடி வினா, நூலகம், வானவில் மன்றம் போன்றவற்றிலும் நாடகம், இசை, நடனம் போன்ற கல்வி சாரா செயல்பாடுகளிலும் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.

வகுப்பறையில் மாணவர்கள் 15 நாள்களுக்கு ஒரு முறை வரிசை மாற்றி அமரவைக்க வேண்டும்.

வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் ஜாதி விவரங்கள் இடம் பெறக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களின் ஜாதியை குறிப்பிடக்கூடாது, கருத்து தெரிவிக்க கூடாது.

உதவித்தொகை விவரங்களை வகுப்பறையில் அறிவிக்க கூடாது. மாணவர்கள் வண்ணக்கயிறு, மோதிரம் போன்றவை அணிய தடை செய்யப்பட்டுள்ளது.

போதைப் பழக்கத்திற்கு ஆளான மாணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க பெற்றோர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆசிரியர் நியமிக்க வேண்டும். மேலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும். இதில் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர்-ஆசிரியர் குழு உறுப்பினர்கள், 1 எஸ்.எம்.சி உறுப்பினர், 1 பணியாளர் இடம்பெற வேண்டும்.

மகிழ் முற்றம் குழுக்கள் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து அமைக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி பள்ளிகளில் ஜாதி மோதல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 14 முதல் பி.இ. பொதுக் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் 144 மாணவர்கள் 200 மதிப்பெண் |

ஜூலை 14 முதல் பி.இ. பொதுக் கலந்தாய்வு - தரவரிசைப் பட்டியலில் 144 மாணவர்கள் 200 மதிப்பெண்
பி.இ. பொது கலந்தாய்வு – 2025

ஜூலை 14 முதல் பி.இ. பொதுக் கலந்தாய்வு

சென்னை, ஜூன் 27

தமிழகத்தில் பொறியியல் சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 முதல் நடைபெறும்.

144 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு 64 மாணவர்கள் மட்டுமே பெற்ற நிலையில், இப்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அண்ணா பல்கலைக்கழகம், அரசுக் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள் ஆகியவையாகும். இங்குள்ள பி.இ., பி.டெக். இடங்கள் ஏறத்தாழ 2 லட்சம் ஆகும்.

விண்ணப்ப பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 6-ஆம் தேதி முடிந்தது. ரேண்டம் எண் ஜூன் 11-ஆம் தேதி வழங்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 20-ஆம் தேதி முடிந்தது.

அமைச்சர் கோவி. செழியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அவரது பக்கத்தில் பொ.சங்கர், இன்னசென்ட் திவ்யா உடனிருந்தனர்.

மொத்தமாக 3,02,374 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 2,50,298 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

தரவரிசை பட்டியலில் 2,41,641 பேர் இடம் பெற்றுள்ளனர். இது 41,773 அதிகம்.

7.5% அரசு ஒதுக்கீட்டில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 47,172 பேர் தரவரிசை எண்ணை பெற்றுள்ளனர்.

சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11 வரை. பொதுப் பிரிவு ஜூலை 14 முதல் ஆக.19 வரை. துணைக் கலந்தாய்வு ஆக.21 முதல் 23 வரை.

திருத்தங்கள் ஜூலை 1-க்கு முன் www.tneaonline.org இல் மேற்கொள்ளலாம்.

முதலிடம்: ஜெ சகஸ்ரா (காஞ்சிபுரம்), இரண்டாம் இடம்: எஸ் கார்த்திகா (நாமக்கல்), மூன்றாம் இடம்: எம். அமலன் ஆண்டோ (அரியலூர்).

அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் வி.தரணி (கடலூர்), பி.மைதிலி (சென்னை), கே. முரளிதரன் (கடலூர்) முதலாமிடம் பெற்றுள்ளனர்.

யாட்டுப் பிரிவு – 2,446 பேர்; மாற்றுத்திறனாளிகள் – 473 பேர்; முன்வாள் ராணுவ வாரிசுகள் – 1,367 பேர்.

மாணவர் பங்கு: 1,32,526 ஆண்கள், 1,09,055 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர்.

பாடத்திட்டங்கள்: மாநிலத் திட்டம் – 2,12,892, CBSE – 27,210, ICSE – 975, பிற வாரியம் – 564.

இலங்கைத் தமிழர்கள் – 79 பேர்; அரசுப் பள்ளி மாணவர்கள் – ஆண் 22,619, பெண் 24,752, மூன்றாம் பாலினம் 1.

அழைப்பு மையம்: 1800-425-0110. 28,559 மாணவர்கள் இதுவரை தொடர்பு கொண்டுள்ளனர். 8,037 மின்னஞ்சல் மூலம், 1,564 நேரடியாக சந்தேகங்கள் கேட்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ்
வாட்டர் பெல் திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்

ஓசூர்/தருமபுரி, ஜூன் 27

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல் திட்டம்' விரைவில் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஓசூரில் தமிழ்நாடு உருது தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதிசெய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் அமல்படுத்தப்படும். கேரளத்தில் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி மாணவர்களின் நலனில் அரசு அக்கறை செலுத்தி வருகிறது.

அதேநேரத்தில், வாட்டர் பெல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தவும் சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும் என்றார்.

ஆசிரியர் பணியிடம் நிரப்பு மற்றும் போக்ஸோ வழக்குகள்

தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அடைவு தேர்வு குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் காலியாக உள்ள 2346 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஜூலை மாதம் நிரப்பப்படும். போக்ஸோ வழக்குகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றம் உறுதிசெய்யப்பட்டால் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Friday, June 27, 2025

மருத்துவக்காப்பீடு என்பது கூடுதல் வசதிதான்: சிகிச்சை செலவு முழுவதையும் வழங்கும்படி அரசு ஊழியர்கள் உரிமை கோர முடியாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மருத்துவக்காப்பீடு என்பது கூடுதல் வசதிதான்: சிகிச்சை செலவு முழுவதையும் வழங்கும்படி அரசு ஊழியர்கள் உரிமை கோர முடியாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மருத்துவக்காப்பீடு - கூடுதல் வசதி என்ற ஐகோர்ட் உத்தரவு

மருத்துவக்காப்பீடு என்பது கூடுதல் வசதிதான்: ஐகோர்ட் உத்தரவு

மதுரை, ஜூன் 27: அரசு ஊழியர்கள் சிகிச்சை செலவு முழுவதையும் பெற உரிமை கோர முடியாது என்றும், மருத்துவ காப்பீடு என்பது சேவை நிபந்தனையில் உள்ள உரிமை அல்ல என்றும் மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

வழக்கு விவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் மேரி திலகவதி, 2015ஆம் ஆண்டு சிகிச்சை பெற்றதற்கான முழு மருத்துவ செலவினை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க கோரி 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். 2018இல் தனிநீதிபதி அவரது மனுவுக்கு அனுகூலமாக உத்தரவு வழங்கினார்.

அரசின் மேல்முறையீடு:

அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு 2019இல் மேல்முறையீடு செய்தது. விசாரணையில் அரசு வக்கீல் கூறியதாவது: அரசு ஊழியர்கள் தங்களது விருப்பப்படி சிகிச்சை பெறுகிறார்கள். அரசிடம் இருந்து முழு தொகையை செலுத்த சொல்லுவது சாத்தியமற்றது. சிகிச்சைக்கான உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பு:

  • மருத்துவ காப்பீடு ஒரு நலத்திட்டம் ஆகும், இது சேவை நிபந்தனையின் ஓர் அங்கமாகக் கருதப்பட முடியாது.
  • முழு சிகிச்சை செலவை கோர முடியாது. அரசு நிர்ணயித்த உச்சவரம்பிற்குள் தான் செலவுகள் வழங்கப்பட வேண்டும்.
  • தனிநீதிபதி உத்தரவு, இந்த உச்சவரம்பைக் கருத்தில் கொள்ளாததால், ரத்து செய்யப்படுகிறது.
  • அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சமமான நடைமுறை மற்றும் நியாயம் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் அரசு ஊழியர்கள் அரசின் விதிமுறைகளுக்குள் மட்டுமே மருத்துவ செலவுக்கான தொகையை கோரலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

40 ஒன்றியங்களில் பணி: ஆசிரியர் கலந்தாய்வில் முன்னுரிமை

40 ஒன்றியங்களில் பணி: ஆசிரியர் கலந்தாய்வில் முன்னுரிமை
40 ஒன்றியங்களில் பணி - ஆசிரியர் கலந்தாய்வில் முன்னுரிமை

40 ஒன்றியங்களில் பணி: ஆசிரியர் கலந்தாய்வில் முன்னுரிமை

சென்னை, ஜூன் 26

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் 40 ஒன்றியங்களில் மூன்றாண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.

சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • 2021–2022 கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் வழங்கிய வழிகாட்டுதலின்படி, அதிக காலிப்பணியிடங்கள் உள்ள 40 ஒன்றியங்கள் முன்னுரிமை ஒன்றியங்களாக தேர்வு செய்யப்பட்டது.
  • 2022-ஆம் ஆண்டில் அந்த ஒன்றியங்களில் மாற்றம் பெற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இவ்வாண்டு (2025-2026) கலந்தாய்வில் முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள்.
  • விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் முன்னுரிமையை தெரிவு செய்தால், 2022-ல் அந்த ஒன்றியத்தில் மாறுதல் பெற்று மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியதை முதன்மைக் கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து வகை ஆசிரியர்களும் EMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னுரிமை தரப்படும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை சரியாக பதிவுசெய்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை பார்க்கலாம்.

பி.இ. நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 5-இல் நிறைவு

பி.இ. நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 5-இல் நிறைவு
பி.இ. நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை - விண்ணப்ப தேதி அறிவிப்பு

பி.இ. நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை - விண்ணப்ப பதிவு ஜூலை 5-இல் நிறைவு

நாள்: ஜூன் 26 | இடம்: காரைக்குடி

தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 5 அன்று நிறைவடைகிறது.

முக்கிய தகவல்கள்:

  • விண்ணப்ப பதிவு ஜூன் 6 முதல் தொடங்கி ஜூலை 5 வரை நடைபெறுகிறது.
  • பாலிடெக்னிக் அல்லது B.Sc. கணிதம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மாநில அளவிலான கலந்தாய்வை அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி ஒருங்கிணைக்கிறது.
  • மொத்தம் சுமார் 60,000 இடங்கள் உள்ளன.
  • இணையவழி மூலம் விண்ணப்ப விவர நிலை தெரிந்து கொள்ளலாம்.
  • தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வெளியிடப்படும்.
  • கலந்தாய்வு இணையவழியில் நடைபெறும், மாணவர்கள் வீட்டிலிருந்தே கலந்துகொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு, அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

Wednesday, June 25, 2025

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட்-2025 செய்திக்குறிப்பு

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட்-2025 செய்திக்குறிப்பு
தகுதி தேர்வுத் தகவல் - ஆகஸ்ட் 2025

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 600 006

தனிநபர் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு - ஆகஸ்ட் 2025

தகவல் அறிவிப்பு

1. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்பு:
01.08.2025 அன்று துவங்கும் ஆகஸ்ட் 2025 எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 10.07.2025 முதல் 17.07.2025 வரை www.dge.tn.gov.in இல் கிடைக்கும்.

2. தேர்வு கட்டண விவரம்:
- தேர்வு கட்டணம் ₹125/-
- அனுமதி பத்திர கட்டணம் ₹70/-
- மொத்தம் ₹195/-

18.07.2025 மற்றும் 19.07.2025 ஆகிய தேதிகளில் தங்களது மாவட்டக் கல்வி அலுவலகத்தில் செலுத்தலாம். தாமதமாக செலுத்தும் வரை ₹500/- அபராதம் வசூலிக்கப்படும்.

3. விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:
- முன்னர் தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள்
- ஏற்கனவே படிக்காத தனித்தேர்வர்கள் (கல்வி நிறுவனங்களில் சேராதவர்கள்)

4. ஆவணங்கள்:
- பழைய ஹால் டிக்கெட்/மூலம் பத்திரம்
- பிறந்த தேதி சான்று
- அடையாள அட்டை

5. மேலும் விபரங்களுக்கு: www.dge.tn.gov.in

தேர்வு கால அட்டவணை

தேதி கிழமை நேரம் பாடம்
18.08.2025 திங்கட்கிழமை காலை 10 மணி - 12 மணி வரை தமிழ்
19.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி - 12 மணி வரை ஆங்கிலம்
20.08.2025 புதன்கிழமை காலை 10 மணி - 12 மணி வரை கணிதம்
21.08.2025 வியாழக்கிழமை காலை 10 மணி - 12 மணி வரை அறிவியல்
22.08.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி - 12 மணி வரை சமூக அறிவியல்

Monday, June 23, 2025

பத்தாம் வகுப்பு & மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை 2025

பத்தாம் வகுப்பு & மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை 2025
துணைத் தேர்வு நுழைவுச் சீட்டு அறிவிப்பு - ஜூலை 2025

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6

பத்தாம் வகுப்பு & மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை 2025

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - செய்திக் குறிப்பு

நடைபெறவுள்ள ஜூலை 2025 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத, விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது நுழைவுச் சீட்டுகளை 25.06.2025 (புதன் கிழமை) பிற்பகல் முதல் https://apply1.tndge.org/dge-hallticket-active என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித் தேர்வர்கள் "HALL TICKET" என்பதைக் கிளிக் செய்து, தோன்றும் பக்கத்தில் "SSLC & HSE FIRST YEAR SUPPLEMENTARY EXAM, JULY 2025 HALL TICKET DOWNLOAD" என்பதை தேர்வு செய்து, விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டைப் பெறலாம்.

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வுக்கான விவரங்களை, தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு அறிந்து கொள்ள வேண்டும். நுழைவுச் சீட்டு இல்லாமல் தேர்வு எழுத அனுமதி இல்லை.

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 26.06.2025 (வியாழக்கிழமை) முதல் 28.06.2025 (சனிக்கிழமை) வரை தேர்வு நடைபெற இருக்கும் பள்ளிகளிலேயே தேர்வை எழுத வேண்டும்.

இத்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி செய்முறைத் தேர்வுக்கான பள்ளி விவரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஜூலை 2025 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான தேர்வுக்கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

இடம்: சென்னை - 600 006

அரசுத் தேர்வுகள் இயக்குநர்

தேதி: 20.06.2025

Sunday, June 22, 2025

TNPSC- ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்: பாடவாரியான தேர்வு தேதிகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

TNPSC-ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்: பாடவாரியான தேர்வு தேதிகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி தேர்வுத் தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுத் தேதி வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான போட்டித் தேர்வில் தமிழ் தகுதித் தாள், பொது அறிவுத் தாள் மற்றும் பாட வாரியான தேர்வுகளுக்கான தேதிகள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்ப பதிவு: மே 13 முதல் ஜூன் 11 வரை

மொத்த காலியிடங்கள்: 330

பதவிகள்: துணை இயக்குநர் (சட்டம்), உதவி இயக்குநர், மேலாளர், வனத்துறை விஞ்ஞானி, நிருபர், உளவியலாளர், சமூகவியலாளர், கால்நடை மருத்துவர் உள்ளிட்ட 30 வகை

📅 தேர்வுத் தேதிகள்:

  • ஜூலை 20 (காலை 9.30 – 12.30): தமிழ் தகுதித்தாள் மற்றும் பொது அறிவுத் தாள்
  • ஜூலை 20 (மாலை 2.30 – 5.30): கம்ப்யூட்டர் சயின்ஸ், IT, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்
  • ஜூலை 21 (காலை 9.30 – 11.00): ஆங்கில சுருக்கெழுத்து
  • ஜூலை 21 (காலை 9.30 – 12.30): கால்நடை மருத்துவம், சட்டம், வணிக நிர்வாகம், விலங்கியல்
  • ஜூலை 21 (மாலை 2.30 – 4.00): தமிழ் சுருக்கெழுத்து
  • ஜூலை 21 (மாலை 2.30 – 5.30): உளவியல், புள்ளியியல், பொருளாதாரம்
  • ஜூலை 22 (காலை 9.30 – 12.30): தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, கெமிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
  • ஜூலை 22 (மாலை 2.30 – 5.30): சமூகவியல், நகர் ஊரமைப்பு திட்டமிடல்

மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, June 21, 2025

‘உயர் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்’

‘உயர் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்’
உயர் கல்வியில் தர மேம்பாடு

உயர் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

டாக்டர் வேத் பிரகாஷ் மிஸ்ரா கருத்து

சென்னை, ஜூன் 20: இந்தியாவின் உயர் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என மகாராஷ்டிரா தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தர் டாக்டர் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய உயர் கல்வியில் தரம், அங்கீகாரம் மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச கருத்தரங்கில்

900+ மாணவர்கள் - முதுநிலை மற்றும் ஆராய்ச்சி முனைவர் பட்டதாரிகள் இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தோர் - கலந்துகொண்டனர்.

அப்போது, டாக்டர் வேத் பிரகாஷ் மிஸ்ரா கூறியதாவது:

புத்தாக்கங்கள் மற்றும் புதிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வித் தரம் அமைக்கப்பட வேண்டும். பழைய தரமுறைகள் மாற்றப்பட்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இது மாணவர்களுக்கு வெளிநாடுகளிலும் முன்னேற வழிவகுக்கும்.

இந்தியாவின் உயர் கல்வி உலகளாவிய தரத்தில் மேம்பட்டிருப்பது இன்றியமையாத தேவை எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்: ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தர் டாக்டர் உமா சேகர், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி சிங், பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் தமிழ்ச்செல்வன், கல்வித் துறைத் தலைவர் டாக்டர் லதா ரவிச்சந்திரன் ஆகியோர்.

பி.எட்., முதுநிலை மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பப் பதிவு அமைச்சர் தொடங்கி வைத்தார்

பி.எட்., முதுநிலை மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பப் பதிவு அமைச்சர் தொடங்கி வைத்தார்
பி.எட். மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கை பதிவு

பி.எட்., முதுநிலை மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 20: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025–26 கல்வியாண்டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை மற்றும் அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுக்கான சேர்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூன் 20 அன்று தொடங்கியது.

இந்த நிகழ்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் தெரிவித்ததாவது:

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 20 முதல் ஜூலை 9 வரை www.ingasa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தரவரிசைப் பட்டியல் ஜூலை 18 அன்று வெளியிடப்படும். ஜூலை 21 முதல் 25 வரை மாணவர்கள் விருப்பக்கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். ஜூலை 28 அன்று சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணவர்கள் www.iwiase.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

முதுநிலை படிப்பு: 110 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 20 அன்று தொடங்கியது. விண்ணப்பக் கடைசி நாள் ஜூலை 15. தரவரிசைப் பட்டியல் ஜூலை 18 அன்று வெளியாகும்.

சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர்) ஜூலை 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். வகுப்புகள் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கும்.

விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 6 பேருக்கு கல்லூரிக் கல்வித் துறையின் நிதியாளர் மற்றும் பிற பணிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உயர் கல்வித் துறைச் செயலர் சி. சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரி முதல்வர் பா. உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘2700 ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை’

‘2700 ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை’
2,700 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை மற்றும் புதிய வகுப்பறை திறப்பு

2,700 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும்

புதுக் கட்டடம் திறப்பு விழாவில் முதன்மைச் செயலர் தகவல்

கோவை, ஜூன் 20: தமிழகத்தில் 2,700 ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடுத்த மாதத்துக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி. சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

இந்த வகுப்பறைகள் 'அமுதச் செம்மல் என். கே. மகாதேவன்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளன. அடிக்கல் நாட்டு விழா 2024-ஆம் ஆண்டு நடைபெற்றது.

விழாவில் முதன்மைச் செயலர் பி. சந்தரமோகன் கலந்துகொண்டு கட்டடத்தைத் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குநர் எம். கிருஷ்ணன், ரோட்டரி சங்க தலைவர் வரதராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பாலமுரளி, தலைமை ஆசிரியர் டி. வித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதன்மைச் செயலர் உரையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டினார். புதிய கட்டடம் மாணவர்களுக்கு உதவியாக இருப்பதுடன், மாணவர் சேர்க்கையையும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வீதம் மொத்தம் ரூ.4,000 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இவ்விழாவில் எம். கிருஷ்ணன் கூறியதாவது: புதிய கட்டடத்தில் ஆய்வுக்கூடம், நூலகம் உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: அரசின் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: அரசின் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத் தொகை

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: அரசின் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 20: குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுத உள்ள தேர்வர்கள், தமிழக அரசின் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இப்போது, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வு எழுத உள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்தத் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்தத் திட்டம் 2023-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நான் முதல்வன் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகள் மேயர் வழங்கினார்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகள் மேயர் வழங்கினார்
இலவச கராத்தே சீருடைகள் வழங்கும் விழா

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகள்

மேயர் வழங்கினார்

சென்னை, ஜூன் 20: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கராத்தே பயிற்சி பெறும் மாணவிகளுக்கு இலவச சீருடைகளை மேயர் ஆர். பிரியா வெள்ளிக்கிழமை வழங்கினார்.

மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கும் திட்டத்தை மேயர் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். ஒவ்வொரு பள்ளியிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கராத்தே பயிற்சி பெறும் மாணவிகளுக்கு முதற்கட்டமாக புளியந்தோப்பு, அம்மையம்மாள் தெரு ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் 21 மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு சென்னை ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேயர் ஆர். பிரியாவுடன் துணை மேயர் மு. மகேஷ்குமார், மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) ஜெ. விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த. விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மீதமுள்ள மாணவிகளுக்கு சீருடைகள் பள்ளி வாரியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 25 -இல் நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 25 -இல் நிறைவு
மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 25 -இல் நிறைவு

சென்னை, ஜூன் 20: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 25 மாலை 5 மணி கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், ESI மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.

சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் உள்ளன. மொத்தம் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

496 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிடிஎஸ் படிப்புக்கு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 மற்றும் தனியார் கல்லூரிகளில் 1,900 இடங்கள் உள்ளன. இதில் 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மொத்தம் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பப் பதிவு ஜூன் 6 முதல் www.tnmedicalselection.org மூலம் ஆன்லைனில் செய்யலாம்.

இதுவரை 57,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் தற்போது உள்ள சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் பதிவேற்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

2025 -தமிழ்நாடு அரசின் முதன்மைத் தேர்வுக்கான நான் முதல்வன் ஊக்கத் தொகை திட்டம் அறிவிப்பு - 20.06.25

2025 -தமிழ்நாடு அரசின் முதன்மைத் தேர்வுக்கான நான் முதல்வன் ஊக்கத் தொகை திட்டம் அறிவிப்பு - 20.06.25
நான் முதல்வன் UPSC ஊக்கத்தொகை அறிவிப்பு

நான் முதல்வன் - UPSC தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் 07.03.2023 அன்று தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுப் பிரிவானது, தமிழக இளைஞர்கள் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மையத்துடன் (AICSCC) இணைந்து, யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வுகளுக்காக பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி, வசதிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ்:

  • ஒவ்வொரு ஆண்டும் 1,000 மாணவர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • முதன்மைத் தேர்வுக்குத் தயாராக ரூ.7,500 மாத ஊதியம் (10 மாதங்கள்).
  • முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.
  • மொத்த நிதி ஒதுக்கீடு: ரூ.10 கோடி.

2025 UPSC முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும்.

இந்த ஊக்கத்தொகையைப் பெற, UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 21.06.2025 முதல் 02.07.2025 வரை கீழ்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்:

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

திறமைக்கு மரியாதை: யு.பி.எஸ்.சி., புதிய திட்டம்

திறமைக்கு மரியாதை: யு.பி.எஸ்.சி., புதிய திட்டம்
பிரதிபா சேது திட்டம் - UPSC தேர்வாளர்களுக்கான புதிய வாய்ப்பு

பிரதிபா சேது திட்டம்

யு.பி.எஸ்.சி. இறுதித் தேர்வு வரை முன்னேறியும், நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மத்திய அரசின் பிற துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணியமர்த்த புதிய வாய்ப்பை பெறும் வகையில், பிரதிபா சேது என்ற திட்டத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) அறிமுகப்படுத்தியுள்ளது.

UPSC தேர்வுகள் மற்றும் பங்கேற்பு

  • UPSC ஆண்டுதோறும் 24 வகையான பணி பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துகிறது.
  • 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆண்டுதோறும் விண்ணப்பிக்கின்றனர்.
  • முதன்மை தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் இறுதி தெரிவு நடைபெறுகிறது.

பெரும்பாலானோர் நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்து விடுகின்றனர். மேலும், வயது வரம்பு காரணமாக மீண்டும் தேர்வுக்கு தோன்ற முடியாமல் வாய்ப்பை இழக்கின்றனர்.

பிரதிபா சேது திட்டத்தின் அம்சங்கள்

  • முதன்மை மற்றும் பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு.
  • மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகள்.
  • தனியார் துறைகளிலும் மேலாண்மை நிலை வேலை வாய்ப்புகள்.
  • நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றும் தேர்வு செய்யப்படாத 10,000+ தேர்வாளர்களின் விவரங்கள் இணையதளத்தில்.
  • தனியார் நிறுவனங்களுக்கு உள்நுழைவு ID வழங்கப்படுகிறது.

பயன் பெறுவோர் யார்?

UPSC முக்கியத் தேர்வுகளை தாண்டியும், இறுதிச் சிறுமையில் இடம் பெறாத திறமையான தேர்வாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் துறைகளில் மேல்மட்டப் பதவிகளில் நியமிக்கப்பட வாய்ப்பு பெறுவார்கள்.

இதன் மூலம், இழந்த வாய்ப்பை மீண்டும் ஒரு புதிய பாதை வழியாக பெறும் வகையில், UPSC பிரதிபா சேது திட்டம் இந்திய திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் முயற்சி ஆகும்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை.., தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை.., தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?
மாணவர் சேர்க்கை விவரங்கள் - 2025

2025-26 மாணவர் சேர்க்கை விவரங்கள் - தமிழக அரசு பள்ளிகள்

தமிழக அரசு தொடக்கக் கல்வி இயக்குநரகம் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதில், மார்ச் 1 முதல் ஜூன் 17, 2025 வரை நடைபெற்ற சேர்க்கை குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வகுப்பு மாணவர் சேர்க்கை
முதலாம் நிலை (KG) சுமார் 22,000 மாணவர்கள்
ஒன்றாம் வகுப்பு - தமிழ் வழி சுமார் 1,70,000 மாணவர்கள்
ஒன்றாம் வகுப்பு - ஆங்கில வழி சுமார் 52,000 மாணவர்கள்
2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 65,000 மாணவர்கள்
மொத்தம் மூன்று லட்சத்திற்கும் அதிகம்

இந்த மாணவர் சேர்க்கை விவரங்களில், சென்னை மாவட்டம் மாநிலத்திலேயே அதிகமான சேர்க்கையைப் பெற்றுள்ளது — சுமார் 18,000 மாணவர்கள்.

மாற்றாக, நீலகிரி மாவட்டம் குறைந்த சேர்க்கையுடன் உள்ளது — சுமார் 1,300 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

B.Ed மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம்

B.Ed மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம்
பி.எட். 2025 - 2026 சேர்க்கை அறிவிப்பு

பி.எட். 2025 - 2026 சேர்க்கை இணையவழி விண்ணப்பம் தொடக்கம்

செய்தி வெளியீடு எண்: 1390    நாள்: 20.06.2025

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுநிலைப் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.

இன்று (20.06.2025) சென்னை இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பி.எட். மற்றும் முதுநிலை பாடப்பிரிவுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு www.tngasa.in தளத்தில் 20.06.2025 முதல் 09.07.2025 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தரவரிசைப் பட்டியல்: 18.07.2025 அன்று வெளியிடப்படும்.

விருப்பக் கல்லூரி தேர்வு: 21.07.2025 முதல் 25.07.2025 வரை (6 நாட்கள்)

இடஒதுக்கீட்டு ஆணை: 28.07.2025 அன்று www.iwiase.ac.in தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

கல்லூரிகளில் சேரும் நாள்: 31.07.2025 முதல் 04.08.2025 வரை

வகுப்புகள் தொடக்கம்: 06.08.2025

பி.எட். 2025 - 2026 சேர்க்கை தொடர்பான விவரங்கள்

பொருள் விவரம்
அரசு கல்வியியல் கல்லூரிகள் 07 (900 இடங்கள்)
அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரிகள் 14 (1140 இடங்கள்)
மொத்தம் 21 (2040 இடங்கள்)
இணையவழி விண்ணப்ப தேதி 20.06.2025 முதல் 09.07.2025 வரை
தரவரிசை பட்டியல் வெளியீடு 18.07.2025
விருப்பக் கல்லூரி தேர்வு 21.07.2025 முதல் 25.07.2025 வரை
இட ஒதுக்கீட்டு ஆணை 28.07.2025
கல்லூரியில் சேரும் நாள் 31.07.2025 முதல் 04.08.2025 வரை
வகுப்புகள் தொடக்கம் 06.08.2025

சிறப்பு பட்டதாரி ஆசிரியர் நியமன விதிகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

சிறப்பு பட்டதாரி ஆசிரியர் நியமன விதிகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு
சிறப்பு பட்டதாரி ஆசிரியர் நியமன வழிகாட்டுதல்

சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான வழிகாட்டுதல்கள்

சென்னை: அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக, சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக் கல்வித் துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அரசாணையின் முக்கிய அம்சங்கள்:

  • மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு பி.எட். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
  • இதற்கு முன்னர் பிரத்யேக விதிகள் இல்லாத நிலையில், தற்போது விதிகள் வகுக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • விதிகள் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (NCERT) மற்றும் இந்திய புனர்வாழ்வு குழுமம் (RCI) வழிகாட்டுதலின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.
  • நிரந்தரப் பட்டதாரி ஆசிரியர் விதிகள் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

நியமன அதிகாரி மற்றும் வயது வரம்பு:

  • இணை இயக்குநர் (பணியாளர் நலன்) நியமன அதிகாரியாக செயல்படுவார்.
  • பொதுப் பிரிவில் 53 வயதுக்கும் மேலானவர்கள் தகுதி இல்லை.
  • பிற பிரிவுகளில் 58 வயதுக்கும் மேலானவர்களுக்கு தகுதி இல்லை.

தகுதிகள்:

  • அபிலாபிகள் கட்டாயமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மொத்தம் 12 வகையான கல்வித் தகுதிகள் அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் அடிப்படையில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்பட வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, June 14, 2025

தமிழகத்தில் 2.34% குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்!

தமிழகத்தில் 2.34% குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்!
நீட் 2025 முடிவுகள்

தமிழகத்தில் 2.34% குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரிய நாராயணன் தேசிய அளவில் 27-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் 2.34% குறைந்துள்ளது. முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்வுக்கான விவரங்கள்:

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் MBBS, BDS, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.

2025-ம் ஆண்டுக்கான NEET தேர்வு மே 4-ம் தேதி 552 நகரங்களில் நடத்தப்பட்டது. மொத்தம் 22,76,069 பேர் விண்ணப்பித்தனர். 22,09,318 பேர் தேர்வை எழுதினர்.

தேர்ச்சி விகிதம் விவரம்:

நாடு முழுவதும் 12,36,531 பேர் (55.96%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு விட இது 0.45% குறைவாகும்.

தமிழகத்தில் 1,35,715 பேர் தேர்வை எழுதியதில் 76,181 பேர் (56.13%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 58.47% ஆக இருந்தது. எனவே, 2.34% சதவீதம் குறைவாகியுள்ளது.

முன்னணி மதிப்பெண்கள்:

நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. மகேஷ் குமார் (ராஜஸ்தான்) 686 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழக மாணவர் சூரிய நாராயணன் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடமும், தேசிய அளவில் 27-வது இடமும் பெற்றுள்ளார்.

கட்-ஆப் மதிப்பெண்கள்:

பொதுப் பிரிவு / EWS: 686 முதல் 114 மதிப்பெண்கள் (50th percentile) - 11,01,151 பேர்

OBC: 143 முதல் 113 மதிப்பெண்கள் - 88,692 பேர்

SC / ST: 143 முதல் 113 மதிப்பெண்கள் - 45,935 பேர்

மாற்றுத் திறனாளிகள்: 143 முதல் 113 மதிப்ப